வரலாறு
இத்திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. செண்பக மன்னன் என்பவரால் கட்டப்பட்டது. கோவிலில் உள்ள அனைத்து தூண்களிலும் மிகவும் அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. அகத்திய முனிவர் சிறிது காலம் இக்கோவிலில் தவம் செய்தார். அகத்திய முனிவர்க்கு தனி சன்னதியும் உள்ளது.
சன்னதிகள்
விநாயகர் சன்னதி, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கூடிய சன்னதி, மகா லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை அம்மன், குருபகவான், நவநீதகிருஷ்ணன், சண்டிகைஸ்வரர், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர், சூரிய பகவான், சந்திர பகவான், நவகிரகங்கள், பைரவர் என தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன.
செண்பக வல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி
ஏழு அடி உயரத்தில் அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமிக்கு தனித்தனியாக கொடி மரம் இருக்கிறது. நந்தி சிலையும் இருக்கிறது.
திருவிழா
பங்குனி திருவிழா மிகவும் விஷேசமானது. தேர்த்திருவிழா, தெப்பத்திருவிழா என அதிவிமர்சையாக பங்குனி மாதத்தில் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணமும் ஆடி மாதத்தில் அம்மன் வளைகாப்பும் மிகவும் சிறப்பாக நடைபெறும். அஷ்டமி, பௌர்ணமி, கிருத்திகை போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிரதோஷ தினத்தில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெறும்.